Bon Secours Arts  and Science College for Women, MANNARGUDI

தமிழ்த்துறை

B.A. Tamil (3 Years)

உலகமொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத்திகழும் மொழிமிகச் சிலவே.  அவற்றுள் செம்மைமிக்கமொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சிலமொழிகளே.  தமிழ்மொழி அத்துக சிறப்புமிக்க செம்மொழியாகும்.  தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை.  ஓசை இனிமை,சொல் இனிமை,பொருள் இனிமைகொண்டவை.  பலமொழிகள் கற்றகவிஞர் பாரதியார்,

“யாமறிந்தமொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”

என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்துபாடுகிறார்.

“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!”

என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றிப் பாரதியார் கூறிய கருத்து தமிழ்த்தாய்க்குப் பொருந்துவதாக உள்ளது.  தமிழுக்குமுத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.  இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்.  இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்.  நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டும். 

தமிழில் காலந்தோறும் பலவகையான இலக்கியவடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.  செய்யுள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, துளிப்பா போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள்.  கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.  தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று மேன்மேலும் வளர்ந்து கொண்டே வருகின்றது. 

மூத்தமொழியான தமிழ் கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புதுமொழியாகவும் திகழ்கிறது.  இத்தகு சிறப்புமிக்க மொழியைக் கற்பது நமக்குப் பெருமையாகும்.  தமிழ் மொழியின் வளமைக்கும், வளர்ச்சிக்கும் பங்காற்ற   வேண்டியது நமது கடமையாகும்.

வாழ்கதமிழ்! வளர்கதமிழ்!

மன்னார்குடி, பான் செக்கர்ஸ் கலைமற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரியில் தமிழ்த்துறை 2020-2021 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் 30 மாணவிகளைக் கொண்டுவகுப்புகள் தொடங்கப்பட்டுமாணவிகள் கற்றல் திறனைநன்முறையில் வளர்த்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.   தமிழ்த்துறையானது பல்கலைக்கழக மானியகுழுவின் பரிந்துரையின் படிதகுதியும், திறமையும் கொண்ட பேராசிரியர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.  2022 – 2023 ஆம் கல்வியாண்டிலும் தமிழ் மொழிமீது ஆர்வம் கொண்டு மாணவிகளின் சேர்க்கை சிறப்பாக உள்ளது.

தமிழ் மொழியின் இலக்கு

  • தமிழ் மொழியானது எம்மொழியின் துணையுமின்றி தனித்து இயங்கும் சிறப்புமிக்கது. அம்மொழியின் சிறப்பினை அறிய செய்தல்.
  • மொழியின் வளர்ச்சிநிலைக்கு ஏற்றார் போல் புதுவிதமான சிந்தனைக் கருத்தாக்கங்களை உணரச் செய்தல்.
  • தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை இளைய தலைமுறையினர்க்குஎடுத்துரைத்தல்

துறையின் நோக்கம்

  • தமிழ் மொழியில் எழுத்தாற்றல்,பேச்சாற்றல் வளர்த்தல்
  • பிழையின்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் வழி வகுத்தல்.
  • அறிவியல் தமிழ், கணினித்தமிழ் வாயிலாக இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மாணவிகளை ஊக்கப்படுத்துதல்.

கற்பிக்கும் துறை

  • பி.ஏ., தமிழ்
    – மூன்று ஆண்டுகள் (70 மாணவிகள்)

பாடத்திட்டம்

முதற்பருவம் மற்றும் இரண்டாம் பருவம்

Download

துறைப்பேராசிரிரியர்களின் பெயர்கள்

Name Of The Faculty Designation Qualification
மா. அறவாழிஉதவிப்பேராசிரியர்ஏம்.ஏ., பி.எட்., எம்.ஃபில்.,
சி. ஆர்த்திதுறைத்தலைவர் (மற்றும்) உதவிப்பேராசிரியர்ஏம்.ஏ., எம்.ஃபில்., (பி.எச்.டி)
முனைவர் பா. சுதாஉதவிப்பேராசிரியர்ஏம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி
முனைவர் ப.அகல்யாஉதவிப்பேராசிரியர்ஏம்.ஏ., எம்.ஃபில்., நெட் (பி.எச்.டி)
கோ.கண்ணகிஉதவிப்பேராசிரியர்ஏம்.ஏ., எம்.ஃபில்., (பி.எச்.டி)
முனைவர் நி.இராதிகாஉதவிப்பேராசிரியர்ஏம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி

தமிழ்த்துறையின் மேம்பாடுகள்

  • கல்விநிலையங்களில் தமிழாசிரியர் பணியாற்றும் வாய்ப்பு.
  • பேச்சாளராக, எழுத்தாளராக சமுதாயத்தில் அனைவரும் போற்றும் வகையில் வளர்வதற்கு வழிக்காட்டுகின்றது.
  • அயல்நாடுகளில் பணிபுரிவதற்குவழிவகுக்கிறது.
  • தமிழக அரசால் நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வுகளில் எளிமையாக வெற்றிபெற்று இளம் வயதில் அரசுப்பணிக்கு செல்லல்.
  • பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றுதல்

தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தனித்துவ செயல்பாடுகள்

பேராசிரியர் திறன்வளர்ச்சி மேம்பாட்டு நிகழ்வு-பயிலரங்கம்-கருத்தரங்கம்-உரையரங்கம்- கவியரங்கம் பங்கேற்ற பேராசிரியர்கள்

View Events attended by the
Faculty of the B.A Tamil Dept.

பேராசிரியர் திறன்வளர்ச்சி மேம்பாட்டு நிகழ்வு-பயிலரங்கம்-கருத்தரங்கம், உரையரங்கம், கவியரங்கம், போட்டிகள் ஒருங்கிணைத்த துறை

View Events conducted by the
Faculty of the B.A Tamil Dept.

மாணவிகளின் தனித்திறன் வெளிப்பாட்டு சாதனைகள்

View Achievements of the
Students of the B.A Tamil Dept.

பேராசிரியர்களின் கட்டுரை வெளியீட்டு விவரம்

View Publications by the
Faculty of the B.A Tamil Dept.

பேராசிரியர்களின் கட்டுரை வெளியீட்டு விவரம்

View Innovations by
Faculty of the B.A Tamil Dept.

Contact US